சீன கடன் செயலிகளை தடுக்க நடவடிக்கை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீன கடன் செயலிகள் மக்களை ஏமாற்றி வரும் விவகாரத்தை மாநிலங்களையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.நதிமுல் ஹக் எழுப்பினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

சீன கடன் செயலிகள் மக்களை தொந்தரவு செய்து ஏமாற்றும் விஷயம் குறித்து கடந்த 6-7 மாதங்களில் மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சகம், கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பல ஆலோசனை கூட்டங்களை நடத்தியுள்ளேன். பல செயலிகள் தவறுதலாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்தகைய செயலிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த செயலிகளை கட்டுப்படுத்தும் உத்தரவுகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பிக்கிறது.

எந்த செயலிகளும் மக்களை ஏமாற்றாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ரிசர்வ் வங்கி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மத்திய நிதியமைச்சகம் ஆகியவை இணைந்து எடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்