24 மணி நேரத்தில் கட்டுமானம், 48 மணி நேரத்தில் உட்புற வேலைப்பாடுகள்... ப்ரீ காஸ்ட் வீடுகள்!

By செய்திப்பிரிவு

பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு பழகி விட்ட நாம் நமக்கு பிடித்த உணவு முதல் ஆடைகள் வரை அனைத்தையும் நமது விருப்பத்துக்கு ஏற்ப ஆர்டர் கொடுத்தால் பொருட்கள் டெலிவரி செய்யப்படுவது போல், வீடுகளும் டெலிவரி செய்யப்பட்டால் எப்படி இருக்கும்? நினைத்து பார்க்கவே ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆட்கள் பற்றாக்குறை, இடநெருக்கடி, கட்டிடக் கழிவுகள், காலதாமதம் ஆகிய பிரச்சினைகள் இல்லாமல் நமக்கு வீடுகளை உருவாக்கி டெலிவரி செய்யும் ரெடிமேடு வீடுகள் தான் ப்ரீ காஸ்ட் வீடுகள்.

ப்ரீகாஸ்ட் கட்டுமானத்தில், சாதாரண வீடுகள், கட்டப்பட்ட வீடுகளின் மேல் புதிய வீடுகளை அமைப்பது, பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வணிக வளாகங்கள், ஆடம்பரமான புதுமையான பங்களாக்கள், அலுவலகங்கள் மற்றும் நகரக்கூடிய வீடுகளையும் அமைக்க முடியும். தோற்றத்திலும், செயல்திறனிலும் சிறந்து விளக்கும் இந்த ‘ப்ரீ காஸ்ட் வீடுகள்’ கட்டுமானத் துறையில் முக்கிய இடத்தை பெறும் என்கின்றனர், இந்த துறை வல்லுநர்கள்.

இதுகுறித்து கட்டுமான துறை பொறியாளர்கள் கூறும்போது,‘ ‘ப்ரீ பேப்ரிகேட்டட்’ அமைப்புகளைக் கொண்டு, கட்டுமானம் நடைபெறுகின்ற இடங்களில் கான்கிரீட், கம்பி, செங்கல், மணல், ஜல்லி ஆகியவை இல்லாமல் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

ஆயத்த வீடுகளை அமைப்பதற்கான சுவர்கள், பீம்கள், காலங்கள் மற்றும் ஸ்லாப்புகள் என அனைத்துமே தொழிற்சாலைகளில் செய்யப்பட்டு வீடு கட்ட வேண்டிய இடத்துக்கு வாகனங்கள் மூலம் எடுத்துவரப்பட்டு கிரேன் உதவியுடன் மிகவும் அழகாக, அற்புதமாக மற்றும் உறுதியாக அந்த அந்த இடங்களில் அமைத்து அவற்றை பொருத்தி தரும் முறைக்கு ‘பிரீ பேப்ரிகேட்டட்’ கட்டுமானம் என அழைக்கிறார்கள்.

பலவகை வீடுகள்: இந்த ப்ரீ காஸ்ட் வீடுகளில் பங்களா வகை வீடுகள், பண்ணை வீடுகள், சிறிய வீடுகள், பெரிய வணிக வளாகங்கள், கடைகள், டிசைனர் வீடுகள், தங்கும் விடுதிகள் என எதை வேண்டுமானாலும் கட்டித் தர முடியும் . கட்டுமானம் நடைபெற வேண்டிய இடங்களில் இத்துறை வல்லுநர்கள் வந்து கள ஆய்வு செய்து நம்முடைய கட்டுமான வரைவு திட்டங்களுக்கு தகுந்தார் போல் அளவுகளை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, அந்த நிலத்தை ஆய்வு செய்து எத்தனை அடுக்கு மாடிகள் வரை கட்டலாம், எத்தனை காலங்கள் போட வேண்டும் எத்தனை தூண்கள் அமைக்க வேண்டும் என்பது போன்ற திட்டத்தையும் எந்தெந்த இடங்களில் ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள் மற்றும் பரண்கள் அமைக்க வேண்டும் என்ற நமது விருப்பத்தையும் திட்டமிடுகிறார்கள். சாதாரண வீடுகளை விட இதுபோன்ற ஆயத்தவீடுகளை கட்டும் பொழுது அதற்காகும் கட்டுமான செலவானது சராசரியாக 10 முதல் 25 சதவீதம் குறைவாகவே உள்ளது.

கட்டுமான தளங்களுக்கு தச்சர்கள், பிளம்பர்கள் மற்றும் எலக்டிரீஷியன்கள் வந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் தொழிலாளர் செலவு குறைவாகவே உள்ளது. இதுபோன்ற ஆயத்த வீடுகள் அதிக மதிப்புள்ளவையாக இருப்பதுடன் அதிக ஆற்றல் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

இந்த வீடுகள் வெப்பத்தை தக்க வைத்து மின் கட்டணத்தை குறைக்கின்றன. இறுக்கமான கட்டுமானம் கொண்ட ப்ரீ காஸ்ட் வீடுகள் இயற்கை பேரழிவுகளை தாங்கும் திறன் கொண்டவை என்பது இதன் கூடுதல் சிறப்பு. நடைமுறையில் உள்ள சாதாரண கட்டுமானம் போல் இந்த ப்ரீ காஸ்ட் கட்டுமானங்களும் அதிக ஆயுட்காலம் கொண்டவை. சரியான பராமரிப்பு இருக்கும் வீடுகள் பல ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவையாக இருப்பது போல், இந்த வீடுகளுக்கும் உரிய பராமரிப்பு இருந்தால் நீண்ட ஆயுட்காலம் தரும் என்பது நிதர்சனம். ப்ரீ காஸ்ட் வீடுகளும், வீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் இந்த வீடுகளின் மறுவிற்பனையும், மதிப்பும் காலம் செல்லச் செல்ல குறைவதில்லை.

கட்டிட கட்டுமான துறையில் வீடு உள்ளிட்ட பல்வேறு கான்கிரீட் கட்டிடங்கள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும். குறிப்பாக கான்கிரீட் கட்டிடங்களுக்கு அஸ்திவாரம், பில்லர் ஆகியன அமைத்தும் அதற்கு பிறகு செங்கல் கட்டிடம் மேலும் கான்கிரீட் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. ப்ரீ காஸ்ட் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள், 24 மணி நேரத்தில் கட்டப்பட்டு, 48 மணி நேரத்தில் உட்புற வேலைப்பாடுகள் முடிக்கப்பட்டு 72 மணி நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்பதால் பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்து உள்ளது.

குறைவான நாட்களில் ஒரு முழு கட்டுமானத்தையும் விரைவில் கட்டி முடிப்பதால் பணம் சேமிக்கப்படுவதுடன் அதிக அளவில் நேரமும் சேமிக்கப்படுகிறது என்பதை தனிச்சிறப்பு முதலில் கட்டிடத்துக்கான வரைபடத்தை தயாரித்து, ப்ரீ காஸ்ட் தொழில்நுட்பத்தில், பெரிய அளவில் கான்கிரீட் சிலாப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் இன்டர்லாக் முறையில் கான்கிரீட் சிலாப்புகள் இணைக்கப்பட்டு வீடுகள் உருவாக்கப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் வீடுகளை சில ஆண்டுகளுக்குப் பிறகு வேறு இடத்துக்கு கொண்டு சென்று அமைத்துக் கொள்ளும் வசதி உள்ளது. குறுகிய காலத்தில் விரைவில் வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த ப்ரீ காஸ்ட் வீடுகள் அமைந்துள்ளன, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

6 hours ago

வணிகம்

8 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்