தெலங்கானாவில் அமர ராஜா குழுமம் முதலீட்டில் ரூ.9,500 கோடியில் பேட்டரி தொழிற்சாலை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் ரூ.9,500 கோடி முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அமர ராஜா பேட்டரிஸ் நிறுவனம் இந்த முதலீட்டை மேற்கொள்கிறது.

அமர ராஜா குழுமம் ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பேட்டரி, குளிர்பானங்கள், மின்சாதனங்கள், உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் இந்த குழுமம் கால்பதித்துள்ளது. இந்நிலையில், இக்குழுமம் தெலங்கானா மாநிலத்தின் மஹ்பூப்நகர் மாவட்டத்தில் ரூ.9,500 கோடி முதலீட்டில் லித்தியம் அயன் பேட்டரி ஆலையை அமைக்கிறது. அடுத்தப் பத்து ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை மேற்கொள்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெலங்கானா மாநில அரசுடன் அமர ராஜா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 4,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று அக்குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில், பேட்டரி தயாரிப்புத் தொடர்பான நவீன ஆய்வக வசதியும் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வகத்தை மற்ற நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE