நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1.45 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2022-ம் ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,45,867 கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.25,681 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,651 கோடியாகவும், மத்திய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.77,103 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,433 கோடியாகவும் உள்ளது.

மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 9-வது மாதமாக ரூ.1.4 லட்சத்தை தாண்டி வசூலாகியுள்ளது. மத்திய அரசு மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.33,997 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.28,538 கோடியும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயில் இருந்து வழங்கியுள்ளது. வழக்கமான பகிர்ந்தளிப்புக்கு பின்னர் நவம்பர் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.59,678 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.61,189 கோடியும் கிடைத்துள்ளது. இது தவிர நவம்பர் மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.17 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகமாகும்.

மாநிலங்களைப் பொறுத்தவரை, ரூ.21,611 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, நவம்பர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. நவம்பர் 2022-க்கான தமிழகத்தின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.8,551 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.209 கோடியாகவும் உள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்