சர்வதேச மந்தநிலையிலும் வேகமான பொருளாதார வளர்ச்சியில் இந்தியா

By செய்திப்பிரிவு

லண்டன்: சர்வதேச மந்தநிலையிலும் வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி, 2023-24-ம் நிதி யாண்டில் 5.7 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், சீனா, சவுதி அரேபியாவைஉள்ளடக்கிய ஜி20 பொருளாதாரங்களைவிட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகவே இருக்கும்.

மேலும், 2024-25-ல் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (ஓஇசிடி) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், 2023-ல் வளர்ச்சிஎன்பது பெரும்பாலும் வளரும் நாடுகளைக் கொண்ட ஆசிய சந்தையைச் சார்ந்தே இருக்கும். பின்தங்கிய சமூக-பொருளாதார குழுக்கள் உட்பட பெரும்பான்மையான மக்களிடம் நிதி சேவைகள் கொண்டு சேர்க்கப்பட்டதால் இந்தியாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் பொதுச் செலவினத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதே போன்று கல்வி, சுகாதாரத்துக்கு அதிக வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளதாக ஓஇசிடி ஆய்வில் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்