இரு மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்: விரைவில் நாடு முழுவதும் அமல்?

By செய்திப்பிரிவு

புது டெல்லி: இந்தியாவின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவில் இந்தியா முழுவதும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.

இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திர குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கான கட்டணம் டெலிகாம் நிறுவனத்தை பொறுத்து மாறுபடும். இந்த சூழலில் ஏர்டெல் அந்த கட்டணத்தில் விலையை உயர்த்தி உள்ளது.

இப்போது வரை ஹரியாணா மற்றும் ஒடிசா மாநிலங்களில் குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணமாக ரூ.99 உள்ளது. இதில் ரூ.99 டாக்டைம், நொடிக்கி ரூ.2.5 பைசா கட்டணம் மற்றும் 200 எம்பி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதில்தான் ஏர்டெல் இப்போது கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பயனர்கள் இனி ரூ.155-க்கு குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் செய்ய வேண்டி உள்ளது. இதனை சோதனை முயற்சியாகவே ஏர்டெல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தில் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ளும் வசதி, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

இதன் முடிவுகளை அடிப்படையாக கொண்டு இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை ஏர்டெல் கொண்டு வரும் என தெரிகிறது. அப்படி செய்தால் ரூ.155-க்கு குறைவான ரீசார்ஜ் இருக்காது. கடந்த 2018 முதல் ரூ.35, ரூ.49, ரூ.79 கடைசியாக ரூ.99 என குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்