சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் திங்கள்கிழமை வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 519 புள்ளிகள் (0.84 சதவீதம்) சரிந்து 61,144 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 147 புள்ளிகள் (0.21 சதவீதம்) வீழ்ச்சி அடைந்து 18,159 ஆக இருந்தது.

திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:53 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 504.57 புள்ளிகள் சரிவுடன் 61,158.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 151.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,156.50 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தையின் மந்தமான போக்கு, சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் 19 தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் செய்திகளால் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் திங்கள்கிழமை சரிவுடனேயே நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 518.64 புள்ளிகள் சரிந்து 61,144.84 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 147.70 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,159.95 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஆக்சிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் க்ரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல்ஸ், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.


,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

8 days ago

மேலும்