தேசிய திறன் மேம்பாட்டு கழகத் தலைவர் எஸ்.ராமதுரை ராஜினாமா: டாடா சன்ஸ்க்கு தலைவராக வாய்ப்பு

தேசிய திறன் மேம்பாட்டு கழகம் (என்எஸ்டிசி) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு முகமை ஆகிய இரு அமைப்புகளின் தலைவர் எஸ்.ராமதுரை ராஜினாமா செய்திருக்கிறார். டாடா குழுமத் தின் முக்கிய நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவர் ராமதுரை.

புதிய தலைவர் நியமனம் செய்யும் வரை துணைத்தலைவர் ரோகித் நந்தன் தலைவராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்எஸ்டிசி இயக்குநர் குழு இன்று கூடுகிறது. பிரதமர் இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தாகவும் தகவல்கள் தெரிவிக்கின் றன. இது குறித்து ராமதுரை கருத்து எதுவும் கூறவில்லை.

கடந்த வருடம் நிர்வாக இயக்குநர் திலீப் செனாய் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அதுல் பாத்நகர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இருவரையும் முந்தைய மத்திய அரசு நியமனம் செய்தது.

கடந்த அக்டோபர் 24-ம் தேதி சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டபிறகு புதிய தலைவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரு அமைப்புகளில் இருந்தும் ராமதுரை ராஜினாமா செய்திருப்பதால் டாடா சன்ஸ் தலைவராக நியமனம் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இது தவிர டாடா இன்ஸ்ட்டியூட் ஆப் சோசியல் சயின்ஸஸ், ஏர்ஏசியா இந்தியா மற்றும் பிஎஸ்இ ஆகிய நிறுவனங் களின் தலைவராகவும் இவர் இருக்கிறார். 1996-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர்.

முன்னதாக மத்திய அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, என்எஸ்டிசியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE