நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் எல்ஐசி பிரீமியம் வருவாய் 23.87% உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இயக்குநர்கள் குழு இந்த நிதி ஆண்டில் கடந்த செப்.30-ம் தேதியுடன் நிறைவடைந்த முதல் அரையாண்டுக்கான நிதி அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்: கடந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் எல்ஐசியின் பிரீமியம் வருவாய் ரூ.1.86 லட்சம் கோடியாக இருந்தது. அது இந்த நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.2.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 23.87% உயர்வு ஆகும். அதேபோல, வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,437 கோடியில் இருந்து, ரூ.16,635 கோடியாக அதிகரித்துள்ளது.

எல்ஐசியின் வர்த்தக வேகம் தொடர்ந்து வலுவாகவே உள்ளது. இதனால், கடந்த நிதி ஆண்டு முழுமைக்கான சந்தை பங்கு மதிப்பு 63.25% ஆக இருந்த நிலையில், தற்போது அரையாண்டில் மட்டும் 68.25% ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 73.61 லட்சம் பாசிலிகள் விற்கப்பட்ட நிலையில், இந்த அரையாண்டில் 83.59 லட்சம் பாலிசிகள் விற்கப்பட்டுள்ளன. இது 13.55% உயர்வாகும்.

நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளின் மதிப்பு (AUM) ரூ.39.51 லட்சம் கோடியில் இருந்து, ரூ.42.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இது 8.69% வளர்ச்சி பெற்று வருகிறது. அதேபோல, மொத்த குழும பிரீமியம் வர்த்தகம் ரூ.66,296 கோடியில் இருந்து ரூ.1.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 54.94% வளர்ச்சியாகும். புதிய வர்த்தகத்தின் நிகர மதிப்பு ரூ.1,583 கோடியில் இருந்து ரூ.3,677 கோடியாக உயர்ந்துள்ளது. இது 132.28% வளர்ச்சி.

இதுபற்றி எல்ஐசி நிறுவனத்தின் தலைவர் எம்.ஆர்.குமார் கூறும்போது, ‘‘எல்ஐசி நிறுவனத்தின் வர்த்தக வேகம் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளது. மேலும், சீராகவும், தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலும் உள்ளது. தனது பங்குதாரர்கள் அனைவருக்கும் சிறப்பான லாபத்தை வழங்குவது என்ற இலக்கை நோக்கி எல்ஐசி தொடர்ந்து பயணிக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்