சென்னை: முன்னணி ஆடை மற்றும் உள்ளாடை உற்பத்தி நிறுவனமான டாலர் இண்டஸ்ட்ரீஸ், கடந்த செப். 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் மொத்த வருவாய் 2-ம் காலாண்டு மற்றும் அரையாண்டுக்கு முறையே ரூ.342.30 கோடி மற்றும் ரூ.706.30 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் முறையே ரூ.391.00 கோடி மற்றும் ரூ.596.50 கோடியாக இருந்தது. அதேபோல செயல்பாட்டு வருவாய் முறையே ரூ.341.91 கோடி மற்றும் ரூ.703.35 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் முறையே ரூ.390.67 கோடி மற்றும் ரூ.595.25 கோடியாக இருந்தது.
இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விநோத் குமார் குப்தா கூறும்போது, "தற்போது பருத்தி மற்றும் நூல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை ஒட்டுமொத்த இந்திய உள்ளாடை உற்பத்தித் துறையும் சந்தித்து வருகிறது. அடிப்படை மூலப்பொருளாக இருக்கும் நூல், ஒட்டுமொத்த சந்தை சூழ்நிலையை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த சவால்கள் இருந்தபோதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, அரையாண்டு அடிப்படையிலான மொத்த வருவாயில் 18% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது. உள்நாட்டு விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியும், நவீன வர்த்தகம் மற்றும் இ-காம் விற்பனை ஆகியவை அரையாண்டு அடிப்படையில் 67 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago