மும்பை: மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை (நவ.2) காலையில் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 63 புள்ளிகள் (0.10 சதவீதம்) குறைந்து 61,058 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 28 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 18,116 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தின் காலை 9.18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ 130.90 புள்ளிகள் சரிவுடன் 60,990.45 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 1.85 புள்ளிகள் சரிந்து 18,143.55 ஆக நிலைகொண்டிருந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தின் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், வட்டி விகிதங்கள் மாற்றப்படலாம் என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடனேயே தொடங்கியது.
இன்றைய வர்த்தகத்தில் சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஃப்சி பேங், ஐடிசி, ஹெச்டிஃப்சி, ஹெச்சிஎல் டெக்னாலஜி, பஜாஜ் பின்ஸ்சர்வ், ஐசிஐசிஐ, எல் அண்ட் டி உள்ளிட்ட பங்குகள் உயர்வு அடைந்திருந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிட் கார்ப்பரேஷன், ஆக்சிஸ் பேங்க், விப்ரோ, என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago