ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ‘மெட்டா' வருவாய், லாபம் சரிவு

By செய்திப்பிரிவு

நியூயார்க்: கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருவாயும் லாபமும் சரிவை சந்தித்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிதியாண்டு என்பது ஜனவரி முதல் டிசம்பர் வரை கணக்கிடப்படுகிறது. அந்தவகையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.

இதன்படி, 3-வது காலாண்டில் மெட்டா நிறுவனம் 440 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 164 டாலர் லாபம் ஈட்டி உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடும்போது 52% குறைவு. கடந்த ஆண்டின் 3-வது காலாண்டில் இந்நிறுவனம் 919 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 322 டாலர் லாபம் ஈட்டியது.

டிக்டாக்குடன் போட்டி: நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 4% சரிந்து 2,771 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 2,901 கோடி டாலராக இருந்தது.

மெட்டா நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து 2-வது காலாண்டாக சரிந்தது. இதையடுத்து, அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 14% சரிவை சந்தித்தன. விளம்பர வருவாய் குறைந்தது மற்றும் டிக்டாக் செயலியின் போட்டி ஆகிய காரணங்களால் மெட்டா வருவாய் சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்