மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 213 புள்ளிகள் (0.36 சதவீதம்) உயர்ந்து 59,757 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் (0.58 சதவீதம்) உயர்ந்து 17,737 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேர தொடக்கத்தில் சுமார் 300 புள்ளிகள் ஏற்றத்துடன் இருந்த சந்தை ஒரு கட்டத்தில் 59,960 வரை உயர்ந்து பின்னர் 59,497 வரை சரிவையும் கண்டது. வர்த்தகத்தின் காலை 09:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 332.01 புள்ளிகள் உயர்வுடன் 59,875.97 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் 115.05 புள்ளிகள் உயர்ந்து 17,771.40 ஆக நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில், பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 212.88 புள்ளிகள் உயர்ந்து 59,756.84 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80.60 புள்ளிகள் உயர்ந்து 17,736.95 ஆக இருந்தது.
வர்த்தக நேரத்தின் ஆரம்பத்தில் எஃப்எம்சிஜி மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் கவனம் குவிந்தததால் லாபத்துடன் தொடங்கிய வர்த்தகம், உலகளாவிய மந்தமான சந்தைப் போக்கு, ஆசிய சந்தை நிலவரம் காரணமாக பின்னர் சற்றே தடுமாற்றம் கண்டது. எனினும், ஏற்றத்துடனே பங்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
» இந்தியாவில் சீன பொருட்களின் இறக்குமதி வரலாறு காணாத உயர்வு | இது சாதகமா?
» பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்: சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல்ஸ், பவர் க்ரிடு, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், கோடாக் வங்கி, எம் அண்ட் எம், ஹெச்டிஎஃபிசி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டைட்டன் ஆகிய பங்குகள் 1 சதவீதம் வரையில் உயர்ந்திருந்தன. மறுபுறம் பஜாஜ் ட்வின்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே, டெக் எம், விப்ரோ பங்குகள் 2 சதவீதம் வரை சரிவை சந்தித்திருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
3 mins ago
வணிகம்
29 mins ago
வணிகம்
6 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
7 days ago