சென்னை: வர்த்தக சின்ன பிரச்சினை தொடர்பாக ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், "மொபைல் பே செயலியின் வர்த்தக சின்னம், ஃபோன் பே செயலியின் லோகோவை போல் உள்ளது. எனவே, தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல உள்ள மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்த நீதிபதி, இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago