5ஜி, தொலைத்தொடர்பு வேலை 34% அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஓராண்டில் 5ஜி மற்றும் தொலைத்தொடர்புத் துறை தொடர்பான வேலைவாய்ப்பு 34% அதிகரித்துள்ளதாக இண்டீட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு தளமான இண்டீட், இந்திய வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் செப்டம்பர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரையிலான ஓராண்டில் 5ஜி மற்றும் தொலைத்தொடர்புத் துறை சார்ந்த வேலைவாய்ப்பு 33.7 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. கரோனாவுக்குப் பிறகு வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் உருவானதால், கடந்த 2 ஆண்டுகளில் சைபர்செக்யூரிட்டி சார்ந்த வேலைவாய்ப்பு 81 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் 5ஜி சேவையை நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தன.5ஜி தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வேலைகளுக்கு நிறுவனங்கள் ஏற்கெனவே ஆட்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டன. வரும் ஆண்டுகளில் இந்த வேலைவாய்ப்பு பெருகும்” என்று இண்டீட் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE