சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.40,736-க்கு விற்பனை யாகிறது.
நகை வாங்குவோர் மகிழ்ச்சி
கடந்த 6-ம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.38,720-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. இதனால், தீபாவளி மற்றும் திருமண விசேஷங்களுக்கு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
» ரஷ்யாவுக்கு ஆதரவா? - அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா மறுப்பு
» மலிவு விலையில் விளம்பரங்களுடன் கூடிய சந்தாவை அறிமுகம் செய்த நெட்ஃப்ளிக்ஸ்: இந்தியாவில் எப்போது?
ஒரு கிராம் வெள்ளி ரூ.60.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.60,500 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago