பெங்களூரு: ஃபிளிப்கார்ட் பிக் தசரா சேல் வரும் 5-ம் தேதி தொடங்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்த தளத்தின் பிக் பில்லியன் சேல்ஸ் சலுகை விற்பனையின் கிடைத்த தள்ளுபடியை பயன்படுத்த தவறியவர்கள், தசரா விற்பனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5-ம் தேதி தொடங்கும் தசரா விற்பனை வரும் 8-ம் தேதி அன்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் இணைந்துள்ள ஃபிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களில் இந்த சலுகையை ஒருநாள் முன்கூட்டியே பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சலுகையில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? - வழக்கம் போலவே மொபைல் போன்கள் அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கும் என தெரிகிறது. ரியல்மி, போக்கோ, சாம்சங், ஒப்போ, விவோ, ஆப்பிள், சியோமி மற்றும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் இதில் அடங்கும் என தெரிகிறது. அதேபோல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடியும், டிவி மற்றும் வீட்டு சாதன பொருட்களுக்கு 75 சதவீதம் வரையிலும் விலையில் தள்ளுபடி கிடைக்கும் என தெரிகிறது.
லேப்டாப், வெப்கேம், ஸ்பீக்கர்ஸ், ஹெட்போன்கள், பிரிண்டர், மானிட்டர், புரோஜெக்ட்டர் போன்றவையும் தள்ளுபடியில் கிடைக்கும் என தெரிகிறது. இது தவிர சுலப மாத தவணை சார்ந்த சலுகை மற்றும் கிஃப்ட் கூப்பன்களும் கிடைக்கும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
9 days ago
வணிகம்
9 days ago