ஏர் இந்தியா பயணிகளுக்கான புதிய உணவுப் பட்டியல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் திருவிழாக் காலம் தொடங்குவதை முன்னிட்டு உள்நாட்டுப் பயணிகளுக்கான புதிய உணவுப் பட்டியலை ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பயணிகளுக்கான உணவு மற்றம் சிற்றுண்டிகளை அவர்கள் தேர்வு செய்வதற்கு ஏற்ப பல்வேறு உணவு வகைகளை அது வழங்கி வருகிறது. ஆசிய இந்து சைவ உணவு, இந்திய அசைவ உணவு, சமண மதத்தவர்களுக்கான உணவு, இஸ்லாமியர்களுக்கான உணவு உள்ளிட்ட உணவு வகைகளை ஏர் இந்தியா வழங்கி வருகிறது. இதேபோல், நோயாளிகளுக்கும், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், சிறுவர் - சிறுமிகளுக்கும் ஏற்ற மற்றும் பிடித்தமான பல்வேறு உணவு வகைகளையும் ஏர் இந்தியா வழங்கி வருகிறது.

இந்தியாவில் தற்போது திருவிழாக் காலம் தொடங்கி இருக்கிறது. இதை முன்னிட்டு, உள்நாட்டு விமானப் பயணிகளைக் கவரும் நோக்கில் பிசினஸ் கிளாஸ் மற்றும் எகானமி கிளாஸ் ஆகிய இரு வகை பயணிகளுக்குமான புதிய உணவுப் பட்டியலை ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது.

பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்காக:

காலை சிற்றுண்டி:

பட்டரி அண்ட் ஃப்ளாக்கி குரோய்சன்ட் (Buttery and flaky croissant)
சுகர்-ப்ரீ டார்க் சாக்கலேட் ஓட்மீல் முஃபின் (Sugar-free dark chocolate oatmeal muffin)
சீஸ் அண்ட் ட்ருஃபில் ஆயில் ஸ்க்ராம்பெல்ட் எக் வித் சிவ்ஸ் (Cheese and truffle oil scrambled egg with chives)
மஸ்டர்டு கிரீம் கோடட் சிக்கன் சாசேஜ் (Mustard cream coated chicken sausage)
ஆலு பரோட்டா (Aloo parantha)
மெதுவடை (Meduvada)
பொடி இட்லி (Podiidly for breakfast)

மதிய உணவு:

ஃபிஷ் கறி (Fish curry)
சிக்கன் செட்டினாட் (Chicken chettinad)
பொடேடோ பொடிமாஸ் (Potato podimas)

இரவு உணவு:

சிக்கன் 65 (Chicken 65)
கிரில்டு ஸ்லைஸ்டு பெஸ்டோ சிக்கன் சான்விஜ் (Grilled sliced pesto chicken sandwich)
மும்பை பாடாடவாடா (Mumbai batatawada)

எகானமி கிளாஸ் பயணிகளுக்காக:

காலை சிற்றுண்டி:

சீஸ் மஷ்ரூம் ஆம்லெட் (Cheese mushroom omelette)
ட்ரை ஜீரா ஆலூ வெட்ஜெஸ் (Dry jeera aloo wedges)
கார்லிக் டோஸ்டு ஸ்பைனாச் அண்ட் கான் (Garlic tossed spinach and corn)

மதிய உணவு:

வெஜிடபிள் பிரியாணி (Palatable vegetable biryani)
மலபார் சிக்கன் கறி (Malabar chicken curry)
மிக்ஸ்டு வெஜிடபிள் பொறியல் (Mixed vegetable poriyal)

இரவு உணவு:

வெஜிடபிள் ஃபிரைட் நூடுல்ஸ் (Vegetable fried noodles)
சில்லி சிக்கன் (Chilli chicken)
ப்ளூபெர்ரி வெண்ணிலா பாஸ்ட்ரி (Blueberry vanilla pastry)
காஃபி ட்ருஃபில் ஸ்லைஸ் (Coffee truffle slice)

இந்த புதிய உணவு வகைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருவதாகவும், வாடிக்கையாளர்கள் விருப்பமான உணவை தேர்வு செய்யலாம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்