வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: ரூ.2,009.50-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

வர்த்தகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.35.50 குறைக்கப்பட்டு ரூ.2,009.50-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளன.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைந்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.35.50 குறைந்துள்ளது. இதனால், அதன் விலை ரூ.2,045-ல் இருந்து ரூ.2,009.50 ஆக குறைந்தது.

கடந்த மே 19-ம் தேதிக்கு பின்னர் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

3 hours ago

வணிகம்

4 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

7 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்