வர்த்தக பயன்பாட்டுகான எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு: இன்று முதல் அமலுக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலையை குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு சனிக்கிழமை (அக்.1) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்திய எண்ணெய் நிறுவணங்களின் புதிய விலை நிர்ணயத்தின் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலை ரூ. 36 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய தலைநகர் டெல்லியில், சிலிண்டரின் விலை ரூ.25.50 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.1,859.50 வாக விற்கப்படும்.

இதேபோல், கொல்கத்தா, சென்னை, மும்பை போன்ற நகரங்களிலும் சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மும்பையில், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு ரூ.32.50 காசுகள் குறைப்பட்டு, ரூ.1811.50 காசுக்கு விற்கப்படும். கொல்கத்தாவில், ரூ.36.50 காசுகள் குறைக்கப்பட்டு சிலிண்டர் ரூ.1959க்கு விற்கப்படும். சென்னையில், ரூ.35.50 காசுகள் குறைக்கப்பட்டு புதிய விலையாக ரூ. 2009.50 காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கான இந்த விலைக்குறைப்பு இரண்டாவது முறையாக நடந்துள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் 1-ம் தேதி ரூ.95.50 காசுகள் வரை விலை குறைக்கப்பட்டது. செப்டம்பர் விலைக்குறைப்பு படி, 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் டெல்லியில், ரூ. 1,885-க்கும், கொல்கத்தாவில் ரூ.1995.50 காசுகளுக்கும், மும்பையில், ரூ. 1844 க்கும், சென்னையில் ரூ. 2,045 விற்கப்பட்டன. வீட்டு உபயோகத்திற்கான விலையில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்