2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்ணின் 12 மாத சராசரியில் அதிகரித்த சதவீதத்தின் அடிப்படையில் 01.07.2022 முதல் நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணையை விடுவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு தொகையை 01.07.2022 முதல் கணக்கிட்டு பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,591.36 கோடி கூடுதல் நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,394.24 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிவாரண அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.6,261.20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ரூ.4,174.12 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும்.
» பெங்களூரு நகரில் ஹெலிகாப்டர் சேவை: போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பலே திட்டம்!
» கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் சுணக்கம்: எம்.பி அதிருப்தி
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் என இரண்டுக்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.12,852.56 கோடி செலவாகும். 2022-23 நிதியாண்டில் ரூ.8,568.36 கோடி (அதாவது 2022 ஜூலை முதல் 2023 பிப்ரவரி வரையிலான 8 மாத காலத்திற்கு) செலவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago