சென்னை: கேடிஎம் RC390 மற்றும் RC200 ஸ்பெஷல் எடிஷன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் விவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனமான கேடிஎம் நிறுவனம் தயாரிக்கும் பைக்குகளுக்கு என சந்தையில் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த இரண்டு சிறப்பு பதிப்பு மாடலுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என தெரிகிறது. கேடிஎம் RC16 மோட்டோ ஜிபி மாடல் பைக் மீது கொண்ட ஈரப்பின் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ரீமியம் செக்மெண்ட் மோட்டார் பைக்குகளில் தங்களது செயல்பாட்டை வலுப்படுத்தும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ லிமிடெட் புரோபைக்கிங் தலைவர் சுமீத் நாராங் தெரிவித்துள்ளார். அதோடு இந்த வகை பைக்குகம் இளம் மற்றும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை திருப்தி அடைய செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேடிஎம் RC390 ஜிபி ஸ்பெஷல் எடிஷன் ரூ.3,16,070 மற்றும் RC200 ஜிபி ஸ்பெஷல் எடிஷன் ரூ.2,14,688-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. வெகு விரைவில் வாடிக்கையாளர்கள் இதனை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
இரண்டு பைக்குகளும் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளன. கேடிஎம் RC390 ஜிபி பைக் 373 சிசி திறனை கொண்டுள்ளது. அதுவே RC200 ஜிபி பைக் 199 சிசி திறனை கொண்டுள்ளது. இரண்டு பைக்குகளின் எஞ்சினும் லிக்விட்-கூல்டு சிங்கிள் எஞ்சினை கொண்டுள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago