உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் மும்பை 25-ம் இடத்தில் உள்ளது. விரைவில் முதல் 20 இடங்களுக்குள் மும்பை முன்னேறும் என்று லண்டனை தலைமையிடமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
அதேசமயம், சொந்த நாடு பிடிக்காமல், நாட்டை விட்டு வெளியேறும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் 10 லட்சம் டாலருக்கு (ரூ.8 கோடி) மேல் சொத்து மதிப்பைக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் நியூயார்க் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 3.45 லட்சம் பேர் 10 லட்சம் டாலருக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். 2-வது இடத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, 3-வது இடத்தில் சான் பிரான்சிஸ்கோ, 4-வது இடத்தில் லண்டன், 5-வது இடத்தில் சிங்கப்பூர் இடம் பெற்றுள்ளன.
மும்பை நகரில் 60,600 பேர் 10 லட்சம் டாலருக்கு மேலாகவும், 243 பேர் 10 கோடி டாலருக்கு (ரூ.800 கோடி) மேலாகவும், 30 பேர் 100 கோடி டாலருக்கு (ரூ.8,000 கோடி) மேலாகவும் சொத்து
மதிப்பைக் கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் மும்பை 25-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் மோசமான சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாண்டு பெரும் கோடீஸ்வரர்களில் 8,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாகவும் சொந்த நாடு பிடிக்காமல் வெளியேறுபவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யா, சீனா முதல் 2 இடங்களில் இருப்பதாகவும் ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago