ரான்பாக்ஸி முன்னாள் இயக்குநர்கள் சிங் சகோதரர்களுக்கு 6 மாத சிறை தண்டனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோசடி வழக்கில் ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் மால்வீந்தர் சிங் மற்றும் சிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு உச்ச நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்களான மால்வீந்தர் சிங் மற்றும் சிவிந்தர் சிங் ஆகிய இருவரும் பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்து நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டாய்சி சங்கியோ நிறுவனத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டு விற்பனை செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிங்கப்பூர் தீர்ப்பாயம் டாய்சி நிறுவனத்துக்கு ரூ.3,600 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், சிங் சகோதரர்கள் மற்றும் இந்தியா புல்ஸ் ஆகியோருக்கு எதிராக மேலும் ஒரு புதிய மனுவை டாய்சி நிறுவனம் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் தடைவிதித்த போதிலும் போர்டிஸ் ஹெல்த்கேரின் 17 லட்சம் பங்குகளை இரு தரப்பினரும் அடகு வைத்ததாக அந்த மனுவில் டாய்சி குற்றம் சாட்டியது.

டாய்சி-போர்டிஸ் வழக்கில், சிங் சகோதரர்களுக்கு 6 மாதம்சிறை தண்டனை விதிப்பதாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்