பின்டெக் நிறுவனங்கள் அரசுடன் தொடர்பில் இருக்க வேண்டும் - அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மும்பை: ஃபின்டெக் நிறுவனங்கள் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் அரசுடனும் அதன் அமைப்புகளுடனும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஃபின்டெக் (நிதி தொழில்நுட்பம்) நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்நிலையில் சர்வதேச அளவில் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதாரத்தை உருவாக்குவது குறித்து ‘குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2022’ கருத்தரங்கு மும்பையில் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்வில் நேற்று நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அப்போது ஃபின்டெக்துறை மீதான நம்பிக்கையை எப்படி பலப்படுத்துவது என்றுமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “இடைவெளி அதிகமாக இருக்கும்போது நம்பிக்கை குறையும். அரசுடன் தொடர் உரையாடலில் இருந்தால்தான் இடைவெளி குறையும். பிரதமர், அமைச்சர்கள், நிதி ஆயோக் உறுப்பினர்கள் என அரசுத் தரப்பினர் எப்போதும் உரையாடலுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தயாராகவே இருக்கின்றனர். நம்பிக்கையை உருவாக்குவதற்கான ஒரே வழிதொடர் உரையாடலில் இருப்பதுதான். இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஃபின்டெக் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை சோதித்துப் பார்ப்பதற்கென்று ரிசர்வ் வங்கி தனிகட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

35 mins ago

வணிகம்

9 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்