புதுடெல்லி: சீன கடன் செயலி நிறுவனங்கள் பேமண்ட் கேட்வேக்களில் வைத்திருந்த ரூ.46.67 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
இதுகுறித்து அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று கூறியது:
சீன நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கடன் செயலிகள் மற்றும் கிரிப்டோ முதலீட்டு டோக்கன்களுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த வாரம் நடவடிக்கை மேற்கொண்டது.
குறிப்பாக, டெல்லி, மும்பை, காசியாபாத், லக்னோ, கயா உள்ளிட்ட 14 இடங்களில் அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. மேலும், டெல்லி, குருகிராம், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத், ஜெய்ப் பூர், ஜோத்பூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள வங்கிகள் மற்றும் பேமண்ட் கேட்வேக்களுக்கு சொந்தமான 16 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
» தங்கம் விலை ஒரே நாளில் ரூ.432 குறைந்தது - நகை வாங்குவோர் மகிழ்ச்சி
» உலகின் நம்பர் 2 பணக்காரர் ஆனார் கெளதம் அதானி - பின்னுக்குத் தள்ளப்பட்டார் ஜெஃப் பெசோஸ்
சீன கடன் செயலிகள் பண மோசடியில் ஈடுபட்டதாக நாக லாந்து போலீஸார் வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்த மோசடி தொடர்பான பல்வேறு ஆவணங் கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில், தற்போது சீன கடன் செயலிகள், ரேஸர்பே, கேஷ்ப்ரீ மற்றும் பேடிஎம் உள்ளிட்ட பேமண்ட் கேட்வேக்களில் வைத்திருந்த ரூ.46.47 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈஸ்பஸ் நிறுவனத்தில் மட்டும் சீன செயலிகள் அதிக பட்சமாக ரூ.33.36 கோடியை வைத்திருந்தன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
4 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago