ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தேதி அறிவிப்பு: தள்ளுபடி விலையில் ஐபோன் 13 & 12?

By செய்திப்பிரிவு

சென்னை: இந்தியாவின் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் மெகா ஆஃபர்களை அள்ளி வழங்கும் பிக் பில்லியன் டேஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த நாட்களில் செல்போன் தொடங்கி பல்வேறு பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் இதில் கவனம் பெற்றுள்ளன.

அதேபோல மற்றொரு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்’ என தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. அதனால் இப்போது அது குறித்த எதிர்பார்ப்பு அதன் பயனர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வரும் 23-ம் தேதி இரு நிறுவனங்களும் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை தொடங்குகின்றன.

குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து 10 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல ஐபோன்களும் குறைவான விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஃபிளிப்கார்ட் தெரிவித்துள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அதனை வைரலாக பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.

ஐபோன் 11, 12 மற்றும் 13 சீரிஸ் போன்கள் தள்ளுபடியில் கிடைக்கும் என தெரிகிறது. ஆனால் ஆஃபர் குறித்த விவரத்தை பிளிப்கார்ட் இன்னும் வெளியிடவில்லை. மோட்டோரோலா, சாம்சங், ரியல்மி, போக்கோ போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடியில் கிடைக்கும் என தெரிகிறது. அதில் பெரும்பாலானவை 5ஜி போன்களாக இருக்கும் எனவும் தெரிகிறது.

ஐபோன் 13 ரக போன் சுமார் 45000 ரூபாய்க்கு இந்த தள்ளுபடி விற்பனையில் கிடைக்கும் என தகவல் சொல்லப்பட்டுள்ளது. தற்போது அந்த மாடல் போன் ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்