ஜெனரேஷன் இன்ஜின் தயா ரிப்பு முன்னனி நிறுவனமான பெர்கின்ஸ், இந்தியாவில் தனது புதிய தயாரிப்பு ஆலையை நிறுவியுள்ளது. இதற்காக மஹா ராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் தில் ரூ.1000 கோடி (150 மில்லியன் டாலர்) முதலீட்டில் தனது தயாரிப்பு ஆலையைத் தொடங்கியுள்ளது. இந்த ஆலையை மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை முன் னெடுத்து வருகிறது. இதனடிப் படையில் மஹாராஷ்டிர அரசு தொழில்துறை வளர்ச்சிக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது. இந்திய அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மஹாராஷ்டிர அரசு முன் னணியில் உள்ளது. அதனடிப் படையில் பெர்கின்ஸ் ஆலையை நிறுவ மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்தது என்று பட்னவிஸ் குறிப்பிட்டார். மேக் இன் இந்தியா திட்டத்தை உறுதிபடுத்தும் விதமாக இந்த ஆலை 70 சதவீத உதிரிபாகங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் கடந்த ஆண்டில் இந்திய அளவில் அதிக வேலைவாய்ப்பு களை உருவாக்கிய மாநிலம் மஹாராஷ்டிர மாநிலம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்த நிறுவனத்தின் இந்திய தலைவர் ரிச்சார்டு கோட்ரல் (Richard cotterell) “இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நகரங்களில் ஒன்றாக அவுரங்காபாத் உள்ளது. முக்கியமாக மும்பையிலிருந்து புதுடெல்லி தொழில்துறை மண்டல வழியில் அமைந்துள்ளதன் காரணமாக இங்கு ஆலையை அமைக்க தேர்ந்தெடுத்தோம். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஆரம்ப வளர்ச்சிகளில் உள்ளதால் அவுரங்காபாதில் ஆலையை தொடங்க முடிவு செய்தோம்.
இந்தியாவில் மின் உற்பத்தி சந்தை வளர்ந்து வருகிறது. இதை பயன்படுத்தும் விதமாகவும், ஆசிய சந்தையை மையமாக வைத்தும் இங்கு ஆலையை நிறுவியுள்ளோம். குறிப்பாக 750 கிலோவாட் முதல் 2500 கிலோவாட் மின் உற்பத்தி ஆற்றல் கொண்ட பர்கின்ஸ்4000 சீரியல் பவர் ஜெனரேட்டர் இன்ஜின்கள் இங்கு தயாரிக்கப்படும். இந்த ஆலை ஆண்டுக்கு 3000 ஜெனரேட்டர் இன்ஜின்களை தயாரிக்கும் திறன் கொண் டது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 5000 என்ஜின்கள் தயாரிக்கும் விதமாக உற்பத்தி அதிகரிக்கப் படும் என்றார்.
பெர்கின்ஸ் இந்தியா நிறு வனத்தின் இயக்குநர் ஜாவேத் அஹமது பேசும்போது : ஆசிய மற்றும் இந்திய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சர்வ தேச தரத்திலான இன்ஜின் களை இதன் மூலம் அளிக்க உள்ளோம். குறிப்பாக மருத் துவமனைகள், கட்டுமானத் துறை, டேட்டா நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறையினரின் மின் உற்பத்தி தேவைகளுக்கு பெர்கின்ஸ் இன்ஜின்கள் சரியான தீர்வாக இருக்கும் என்றார்.
கேட்டர் பில்லர் நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். இந்த ஆலை 4000 சீரியல் வரிசையில் 6 முதல் 16 சிலிண்டர்களைக் கொண்ட 4 மாடல் இன்ஜின்களை இங்கு தயாரிக்கும். இவை வாடிக்கை யாளர்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும். அதிக திறன் கொண்ட இந்த இன்ஜின்களை கையாளுவது, பொருத்துவது, பராமரிப்பது எளிது என்றும் குறிப்பிட்டார். இந்த ஆலை உற்பத்தி, அசெம்பிளி, தரப்பரிசோதனை மற்றும் பெயிண்டிங் வேலைகள் என நான்கு கட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆலை 1,20,000 சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இதில் 58,000 சதுர மீட்டர் பரப்பளவில் உற்பத்தி கட்டிட பிரிவு உள்ளது. இதில் 20,748 சதுர மீட்டரில் உற்பத்தி பிரிவும், 20,212 சதுர மீட்டரில் கிடங்கு பகுதியும் உள்ளது. 550 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
சர்வதேச பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய மாக உற்பத்திக்குத் தேவை யான 70% உதிரிபாகங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர் களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன என்று பெர்கின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
8 days ago