புதிய நில குத்தகை கொள்கை மூலம் ரூ.30,000 கோடி கூடுதல் வருவாய் திரட்டுவதற்கு ரயில்வே இலக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு கதி சக்தி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. நாட்டின் போக்குவரத்து கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து இத்திட்டத்தின் கீழ் ரயில்வேயில் அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 300 சரக்கு முனையங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கதி சக்தி திட்டத்தின் கீழ் சரக்கு முனையங்கள் அமைப்பதற்கு இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்நிலையில், சரக்கு முனைய உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ரயில்வே நில குத்தகை கொள்கைகளில் மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது.

இதுவரையில் ரயில்வே நிலங்கள் தனியார் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகால அடிப் படையிலே குத்தகைக்கு விடப்பட்டு வந்தன. இந்நிலையில், குத்தகை கால அளவை 35 ஆண்டுகளாக உயர்த்த சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும், நிலத்தின் உரிமத் தொகையை 6 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாகக் குறைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மாற்றங்களால், புதிய முதலீடுகள் பெருகும் என்றும் சரக்கு முனையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் புதிய கொள்கை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி திரட்ட ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்