இனி உணவகங்களின் மெனு கார்டில் கலோரி குறித்த தகவல்கள் கட்டாயம்: FSSAI அதிரடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இனி வரும் நாட்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு உட்பட்டு இது நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. இதன்மூலம் இனி உணவுப் பிரியர்கள் தங்களது ஆர்டரில் உள்ள பர்கர், பீட்சா, பட்டர் சிக்கன் என அதன் சர்விங் அளவைப் பொறுத்து, அவற்றின் கலோரி விவரத்தை மெனு கார்டு மூலம் அறிந்து கொள்ளலாம். இது kcal என குறிப்பிடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முடிவு அமைந்துள்ளது. இருந்தாலும், இதனை நடைமுறைக்குக் கொண்டுவர உணவகங்கள் கூடுதல் கால அவகாசம் கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மெனு கார்டில் கலோரி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறோம். ஆரோக்கியமே வாழ்வின் வளம். எப்படி நாம் ஆடை அணிகலன்களை வாங்கும்போது அது குறித்து அறிந்துகொண்டு வாங்குகிறோமோ, அதுபோல தான் இதுவும். மக்களின் நலனைக் கருதி இதனைக் கொண்டு வருகிறோம்.

முதலில் பெரிய உணவகத்தில் இருந்து இதனைத் தொடங்குகிறோம். படிப்படியாக சிறிய உணவகங்களுக்கும் கொண்டு வரப்படும். பெரும்பாலான உணவகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளன. சில நிறுவனங்கள் அவகாசம் கேட்டுள்ளன” என உணவுப் பாதுகாப்பு அதிகாரி இனோசி ஷர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 நவம்பர் வாக்கில் இந்த அறிவிப்பை FSSAI வெளியிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவக நிறுவனங்களுக்கு ஜனவரி 1, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை 1 வரை அது நீட்டிக்கப்பட்டது. இப்போது இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவகங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

உடற்பருமன் (obesity) சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக இங்கிலாந்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உடற்பருமனுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்