இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பங்குச் சந்தையுடன் இணைந்த, தனிப்பட்ட ஓய்வூதியத் திட்டமான இதில், முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்பின் மூலம்தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டு, திட்டத்தின் முடிவில் வழக்கமான வருமானத்தைப் பெறமுடியும்.
இந்த திட்டத்தில், பிரீமியத்தை ஒற்றைப் பிரீமியமாகவோ அல்லது வழக்கமான பிரீமியமாகவோ செலுத்தலாம். பிரீமியம், பாலிசி காலம், வயது ஆகியவற்றின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளுக்கு உட்பட்டு, செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை மற்றும் பாலிசி காலஅளவை பாலிசிதாரர் தேர்வு செய்யலாம்.
ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழிக்கும் வகையில், நிலையான வருவாய் கிடைக்க இளைஞர்களுக்கு இத்திட்டம் ஏற்றதாக இருக்கும். எல்ஐசி முகவர்கள் மூலம் அல்லது www.licindia.in என்ற இணையதளம் மூலமாக இந்த திட்டத்தில் இணைய முடியும்.
» நடைபயணத்தின் நிறைவில் மோடியின் பக்தராக மாறுவார் ராகுல்காந்தி: அண்ணாமலை விமர்சனம்
» ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னையில் செப். 10-ல் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: ஸ்டாலின் பங்கேற்பு
எல்ஐசி மற்றும் செபி நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ஜி.என்.பாஜ்பாய், எல்ஐசி மற்றும் ஐஆர்டிஏஐ முன்னாள் தலைவர் டி.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலையில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
வணிகம்
30 mins ago
வணிகம்
14 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago