புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது.
இதுகுறித்து முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மாணி கூறும்போது, “உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறிய தருணம் மிகவும் முக்கியமானது.
தற்போதைய தருணம் இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் பொருளாதாரம் இப்போது மிக வலுவாக இருக்கிறது. இதே நிலை தொடரும்பட்சத்தில் 2030-ம் ஆண்டில் உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மூத்த பொருளாதார நிபுணரான சரண் சிங்கூறுகையில், “இது பெருமைக்குரிய தருணம். நாம் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறோம். சர்வதேச செலாவணி நிதியம் இந்தியாவை வேகமாகவளரும் நாடு என்று தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. 2027-ல்இந்தியாவின் ஜிடிபி பிரிட்டனைவிட பெரும் அளவில் உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பொருளாதார தேக்கநிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
15 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago