ஆன்லைனில் பணம் செலுத்திமுன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளருக்கு செல்போனை விநியோகிக்காத நிறுவனத்துக்கு அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அத்திப்பாளையத்தைச் சேர்ந்த என்.முருகேசன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரபலஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையதளத்தில் ரூ.25,990 மதிப்புள்ள செல்போனை வாங்க தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்று, 2018 அக்டோபர் மாதம் முன்பதிவு செய்தேன்.
அப்போது, ஒரு வாரத்துக்குள் எனக்கு செல்போன் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடன் ஒப்பந்தப்படி எனது வங்கிக் கணக்கிலிருந்து 2018 நவம்பர் முதல் மாத தவணைத் தொகையான ரூ.2,224 பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், நான் முன்பதிவு செய்த செல்போன் எனக்கு வந்து சேரவில்லை.
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் மேலாளரை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்தும் பலனில்லை. இரண்டாவது மாதமும்என்னிடமிருந்து தவணைத் தொகையை பிடித்தம் செய்தனர். அதுவரையிலும் எனக்கு செல்போன் வரவில்லை. இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், நிறுவனத்தின் சேவை குறைபாடு ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.தங்கவேல், உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோர், “மனுதாரரிடம் செல்போன் கொண்டு சேர்க்கப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் எதிர்தரப்பில் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரர் செல்போனுக்காக செலுத்திய ரூ.25,990-ஐ 9 சதவீத வட்டியுடன் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்குச் செலவாக ரூ.3 ஆயிரம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
43 mins ago
வணிகம்
17 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago