நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7%-ஆக சரியும் - மூடிஸ் கணிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரியும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சமச்சீரற்ற பருவநிலை மற்றும் சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரியவந்துள்ளது.

அதன்படி, முன்பு 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற்போது 1 சதவீதம் குறைந்து 7.7சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

அதேபோன்று, வரும் 2023-ம் ஆண்டிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.2 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி காணும் என கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில் இந்த வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2021-ல் 8.3 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சாதகமற்ற புறக் காரணிகளால் 2022-ல் 7.7 சதவீதமாகவும், 2023-ல் 5.2 சதவீதமாகவும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சமநிலை வளர்ச்சியை உருவாக்குவதில் பணவீக்க உயர்வானது சவாலானதாகவே உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 சதவீதம் சரிந்துள்ளதானது. இறக்குமதிக்கான பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்