பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் கோவை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனம் ஃபிரீடம் 75 பாரத் ஃபைபர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.599 மதிப்புள்ள புதிய எஃப்டிடிஎச் இணைப்பு 60 எம்பிபிஎஸ் வேகத்தில் 75 நாட்களுக்கு ரூ.275-க்கு வழங்கப்படுகிறது. மாதம் ரூ.999 மதிப்புள்ள ஓடிடி உடன் எஃப்டிடிஎச் திட்டம் 75 நாட்களுக்கு 150 எம்பிபிஎஸ் வேகத்தில் ரூ.775-க்கு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜி5 பிரீமியம், வூட் செலக்ட் போன்ற ஓடிடி சேவைகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சுதந்திர தின சலுகை வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
மேலும், பிஎஸ்என்எல் தனது மொபைல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, பிரதிமாதம் 75 ஜிபி டேட்டாவுடன் அளவற்ற அழைப்புகளுடன் 300 நாட்கள் வேலிடிட்டி ரூ. 2,022-க்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ரூ.2,399 மற்றும் ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 75 ஜிபி டேட்டாவைக் கூடுதலாகப் பெறலாம். இச்சலுகை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மட்டுமே.
பிஎஸ்என்எல் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் புதிய சிம்கார்டையும், 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்புகளை ரூ.108-க்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாற்றி சிறப்புச் சலுகைகளைப் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago