வேலூர்: வேலூர் பி.எஸ்.என்.எல் சார்பில் ‘ஃபிரீடம் 75’ என்ற அதிவேக பைபர் இன்டர்நெட் திட்டத்தின் குறுகிய கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என வேலூர் மண்டல பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி பி.எஸ்.என்.எல் சார்பில் ‘ஃபிரீடம் 75’ என்ற அதிவேக பைபர் இன்டர்நெட் திட்டத்தை குறுகிய கால சலுகையாக அறிமுகம் செய்துள்ளது.
மாதம் ரூ.699 வாடகை திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 75 நாட்களுக்கு ரூ.275 செலுத்தினால் போதும். மேலும், ரூ.999 மாத வாடகை திட்டத்தில் 75 நாட்களுக்கு ரூ.775 செலுத்தினால் போதுமானது.
ரூ.999 திட்டத்தில் ஹாட் ஸ்டார், சோனி லைவ், லயன்கேட், ஜீ, வூட் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம். இந்த குறுகிய கால சலுகை வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை இருக்கும்.
லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் எண்களை மாற்றாமலேயே அதிவேக பைபர் திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.200 வீதம் மாதாந்திர கட்டணத்தில் 6 மாதங்களுக்கு சலுகையாக கழிக்கப்படும். மேலும், அமைப்பு கட்டணம் ரூ.500 தள்ளுபடி செய்யப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago