தரமற்ற பிரஷர் குக்கர்களை விற்பனைக்கு அனுமதித்த விவகாரம்: ஃபிளிப்கார்ட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தரமற்ற பிரஷர் குக்கர்களை தங்கள் தளத்தில் விற்பனை செய்ய ஃபிளிப்கார்ட் நிறுவனம் அனுமதித்த காரணத்திற்காக, அந்நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) விதித்துள்ளது. அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே இதை உறுதி செய்துள்ளார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அவரவர் நினைத்த நேரத்தில் ஆன்லைன் வழியாக தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது. இதற்கு இ-காமர்ஸ் நிறுவனங்கள் உதவுகின்றன. இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது ஃபிளிப்கார்ட்.

சுமார் 598 தரமற்ற பிரஷர் குக்கர்களை ஃபிளிப்கார்ட் தளத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்பட்ட குக்கர்களை திரும்பப் பெறவும், அதற்கு நுகர்வோர் தரப்பில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பத் தரவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் விற்பனை செய்த சுமார் 2265 தரமற்ற உள்நாட்டு பிரஷர் குக்கர்களை திரும்பப் பெறவும், அதற்கான தொகையை நுகர்வோரிடம் ஒப்படைக்கவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 hours ago

வணிகம்

9 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்