சிறந்த நடுத்தர ஆசிய நிறுவனங்கள் - பிரபல ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஃபோர்ப்ஸ் ஆசியா வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான 200 சிறந்த நடுத்தர நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 24 நிறுவனங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பட்டியலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ல் இந்தப் பட்டியலில் இந்தியா 26-வது இடத்தில் இருந்தது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 22 நிறுவனங்களுடன் சீனா 5-வது இடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்திய நடுத்தர நிறுவனங்களுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் தைவான் அதிகபட்ச அளவாக 30 நிறுவனங்களை உள்ளடக்கி தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஜப்பான் 29 நிறுவனங்களுடன் 2-வது இடத்திலும், தென் கொரியா 27 நிறுவனங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவைப் பொருத்தவரையில், ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் டாலர் இண்டஸ்ட்ரீஸ் கரோனா பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் 30 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன் அதன் நிகர லாபம் 72 சதவீதம் அதிகரித் துள்ளது. இவ்வாறு அந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

19 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்