ஆசிய பங்குச் சந்தையில் பிரிட்டிஷ் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 6 சதவீதம் வரை பவுண்ட் மதிப்பு சரிந்தது.
ஆசிய பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 1.1819 ஆக சரிந்தது. 1985-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பிறகு தற்போதே மிகப் பெரிய சரிவை கண்டுள்ளது. பின்பு பிற்பகல் வர்த்தகத்தில் பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 1.24 ஆக உயர்ந்தது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகத் தயாராவதால், அதனோடு உள்ள பேச்சுவார்த்தைகளில் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் கூறியதைத் தொடர்ந்து இந்தச் சரிவு தொடங்கியது என்று கூறப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகப் போவதாக அறிவித்ததிலிருந்தே பவுண்ட் மதிப்பு சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago