புதுடெல்லி: அலுவலகம், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்களின் வாடகைக்கு இதுவரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால், வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் வணிகத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஜூலை 18-க்குப் பிறகு வணிகப் பயன்பாட்டுக்காக வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் அந்த வாடகைத் தொகைக்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் வாடகை வீட்டில் இருக்கும் அனைவரும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், குடியிருப்புப் பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை. வணிகப் பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுக்கும்போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்தவேண்டும். அதேசமயம், வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை குடியிருப்பு பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடும்போது அதற்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago