ட்விட்டர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இந்திய அரசை ‘காரணம்’ காட்டிய எலான் மஸ்க்... பின்புலம் என்ன?

By செய்திப்பிரிவு

டெலவேர்: ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக தான் தொடுத்துள்ள பதில் வழக்கில் இந்திய அரசை தனது தரப்பு நீதிமன்ற விளக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ளார் எலான் மஸ்க்.

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு இது உறுதி செய்யப்பட்டது. சுமார் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மஸ்கின் டீலை ஓகே செய்திருந்தது ட்விட்டர் தரப்பு.

விரைவில் ட்விட்டரை அவர் கையகப்படுத்துவார் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிட்டுள்ளார் மஸ்க். இதன் காரணமாக அவருக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் டெலவேர் நீதிமன்றத்தில் ட்விட்டருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார் மஸ்க். அதில் தனது தரப்பு வாதங்களை விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் 2021 வாக்கில் இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைதள பக்கத்தில் பதிவாகும் சில பதிவுகளை விசாரிக்கும் வகையில் விதிகளை கொண்டு வந்தது. அதன்படி ட்விட்டர் நிறுவனம் உள்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் என மஸ்க் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தன்னை பேச்சு சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் எனவும் அதில் மஸ்க் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், ட்விட்டர் செயல்படும் நாடுகளில் அந்த நாட்டின் விதிகளுக்கு நெருக்கமாக செயல்பட வேண்டி உள்ளதாக தான் கருதுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் குற்றச்சாட்டை ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது. மேலும், ட்விட்டரை வாங்கும் ஆர்வத்தை அவர் இழந்த காரணத்தால் இப்படி பேசுகிறார் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் இந்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக தங்கள் நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதையும் நீதிமன்றத்தில் ட்விட்டர் மேற்கோள் காட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்