75,000 புதிய தொழில்களை அங்கீகரித்து சாதனை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இதுவரை 75 ஆயிரம் புதிய தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்துள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளன. இது சுதந்திரத்தின் 75-வது ஆண்டுடன் இணைந்த ஒரு மைல்கல். இந்தியா சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் தருணத்தில், இந்த புதிய தொழில் நிறுவனங்கள், புதுமை, வளர்ச்சி, உத்வேகத்தை தூண்டுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, செங்கோட்டையிலிருந்து சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் புதிய தொழில் முனைவோர்களை பயன்படுத்தி, புதிய இந்தியாவை உருவாக்க கனவு கண்டார். தற்போது, புதிய தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 16-ம் தேதி, நாட்டில் புதுமையான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.

அடுத்த 6 ஆண்டுகளில், புதிய தொழில் நிறுவனங்களின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவாக இந்த செயல்திட்டம் வழிகாட்டியுள்ளது. ஆரம்பக்கட்டத்தில், பத்தாயிரம் புதிய தொழில்நிறுவனங்கள் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்டாலும், தற்போது, பத்தாயிரம் புதிய தொழில் நிறுவனங்கள் 156 நாட்களிலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 80-க்கும் மேற்பட்ட புதிய தொழில்நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதால், அவற்றின் எதிர்காலம் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

11 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்