இந்தியாவில் அறிமுகமானது BMW G 310 RR பைக்: விலை & விவரம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய சாலைகளில் ‘வ்ரூம்… வ்ரூம்’ என றெக்கை கட்டி சீறி பாயும் வகையில் BMW G 310 RR பைக் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 1923 முதல் உலகம் முழுவதும் தங்களது BMW மோட்டார்ராட் பிராண்டின் கீழ் தயாரிக்கபப்டும் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது BMW நிறுவனம். இந்நிலையில், இப்போது BMW G 310 RR பைக் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இது G 310 சீரிஸில் அறிமுகமாகி உள்ள மூன்றாவது சீரிஸ் பைக். இதற்கு முன்னர் G 310 R மற்றும் G 310 GS அட்வென்ச்சர் டூரர் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன.

இந்த பைக்கின் முகப்பு விளக்கு ஸ்ப்ளிட் செட் அப்பில் உள்ளது. மாட்டுக் கொம்பின் சாயலில் உள்ளது இதன் டெயில் லாம்ப். ப்ளூடூத் கனெக்டிவிட்டியை கொண்டுள்ளது இந்த பைக். கண்ணாடி, விண்ட் ஸ்கிரீன், ஃபோர்க் போன்றவை டிவிஎஸ் Apache RR 310 பைக்கில் இருப்பதை போல் உள்ளது. BMW சூப்பர்ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள்களுக்கு உரித்தான டிசைனுடன் இந்த பைக் வெளிவந்துள்ளது.

313 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டியூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த பைக் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

ஸ்டாண்டர்ட் வேரியண்ட் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.85 லட்சம். ஸ்டைல் ஸ்போர்ட் வேரியண்ட் பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.99 லட்சம். மேலும் இந்த பைக் சுலப மாத தவணையிலும் கிடைக்கும் என BMW மோட்டார்ராட் தெரிவித்திருந்திருந்தது. குறைந்தபட்சம் மாதம் ரூ.3,999 தவணையாக செலுத்தி இந்த வாகனத்தை பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE