நியூயார்க்: அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உக்ரைன் போர் மற்றும் சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் உலக அளவில் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது. இது இன்னமும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்து விட்டு அதிகமான வட்டி தரும் அமெரிக்க வங்கிகளுக்கு தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
» 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்த இந்தியா
» ஆஸி. தொடரிலிருந்து பின்வாங்கிய தெ.ஆப்பிரிக்கா: உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்
இந்தநிலையில் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. மே மாதம் அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 1 சதவீதம் உயர்ந்த நிலையில், ஜூன் மாதம் 1.3 சதவீதம் அதிகரித்து 9.1 சதவீதம் என்ற மோசமான நிலையை அமெரிக்கா அடைந்துள்ளதாக அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பணவீக்க புள்ளி விவரங்கள் நேற்று வெளியான நிலையில் ஜூன் 2022ல் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
1980 ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் 9 சதவீதத்தைத் தொட்டது. அதன் பின்பு இப்போது தான் 9 சதவீத அளவீட்டை தாண்டி 9.1 சதவீத அளவீட்டை தொட்டுள்ளது. இந்த ஜூன் மாதம் அமெரிக்க வரலாற்றில் அதிகப்படியான பணவீக்கத்தை எட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
13 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago