மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 79.40 ஆக சரிவு கண்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அண்மையில் 79 ஆக சரிவடைந்தது. இந்தநிலையில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
» அதிமுக வரவு செலவு கணக்கை வாசித்தார் சி.விஜயபாஸ்கர்: நிலை வைப்புத் தொகை ரூ.244 கோடி
» குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடையலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்று வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 79.40 ஆக வீழ்ச்சி கண்டது.
உலகளாவிய மந்தநிலை மற்றும் கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் பற்றிய முதலீட்டாளர்களின் கவலைகள் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாக தெரிகிறது. வெள்ளியன்று 79.25 ஆக இருந்ததை ஒப்பிடுகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 79.38/39 ஆக இருந்தது.
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago