ட்விட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்த மஸ்க்: அடுத்தது என்ன?- ஆட்குறைப்பு, சம்பள குறைப்பை எதிர்நோக்கும் ஊழியர்கள்

By செய்திப்பிரிவு

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் நிறுத்தி வைத்துள்ள நிலையில் அதன் ஊழியர்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர். சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற பெரும் சிக்கலில் ட்விட்டர் நிறுவனம் ஆட்படும் என வேதனை தெரிவித்துள்ளனர்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியானதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

எனினும் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அண்மையில் தெரிவித்து இருந்தார். இதற்கு காரணம் ட்விட்டர் கூறுவதை விட 4 மடங்கு போலி கணக்குகள் இருப்பதாகவும், தேவையற்ற செலவுகளால் லாபமற்ற நிறுவனமாக ட்விட்டர் இருப்பதாகவும் மஸ்க் கூறியிருந்தார். இதனால் ஒப்பந்தம் முடிந்தாலும் அது செயல்பாட்டுக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த கேள்விக்கு விடையாக, தற்போது ட்விட்டர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் வெளியேறியுள்ளார். போலி கணக்குகள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கத் தவறியதால், ட்விட்டரை வாங்குவதற்கான தனது 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் இன்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ட்விட்டரின் பங்குகள் 7% சரிந்தன.

ஊழியர்கள் கவலை

மஸ்க்கின் அறிவிப்பால் அவருக்கும், ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே வழக்கும் நடைபெறும் எனத் தெரிகிறது. முன்னதாக போடப்பட்ட ஒப்பந்தப்படி இதனை முடிக்கவில்லை என்றால் $1 பில்லியன் பிரேக்-அப் கட்டணத்தை மஸ்க் செலுத்த வேண்டும். இதை முன்னிறுத்தி ட்விட்டர் நிறுவனம் மஸ்க் மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அதன் ஊழியர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அவநம்பிக்கையையும் சோர்வையும் வெளிப்படுத்தினர். இதனை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ட்விட்டரில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். ரோலர் கோஸ்டர் சவாரி மற்றும் ஒரு குழந்தை தொலைபேசியில் கத்துவது போன்ற மீம்களை பகிரங்கமாக சில ஊழியர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியிட்டனர். பொறியாளர்கள், மார்க்கெட்டிங் தலைவர்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ள பிற ஊழியர்களின் மனநிலையை பதிவு செய்துள்ளனர்.

மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றுவது குறித்துப் பணியாளர்கள் பரவலான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். தலையீடு மற்றும் பிற செலவுகளைக் குறைத்தல், உள்ளடக்க மதிப்பைக் குறைத்தல் மற்றும் தொலைதூரப் பணிகளைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றின் விருப்பத்தேர்வுகள் ஊழியர்களின் வருவாயை பாதிக்கும் என்பது அவர்களது எண்ணம்.

மஸ்கிக் தரப்பு இப்போது மறுக்கும் தொகை நிறுவனத்தின் பங்குகளுக்கு 36 சதவீத பிரீமியத்திற்க நிகரானது. இதனால் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பெரிய ஊதியத்தை குறைக்கும்.

நாங்கள் முன்னோக்கிச் செல்லும் பாதையைப் பற்றி மிகவும் சோர்வாக உணர்கிறோம் என ஒரு ட்விட்டர் ஊழியர் கூறியுள்ளார். "இது உண்மையில் முடிந்துவிட்டது என்று நான் நம்பவில்லை. இனிமேல் தான் பிரச்சினைகள் உள்ளன" என்று மற்றொரு ட்விட்டர் ஊழியர் கூறினார்.;

ட்விட்டர் நிறுவனத்தின் டெவலப்பர் தயாரிப்புகளில் பணிபுரியும் அமீர் ஷேவத், மஸ்க் ஏற்கெனவே ட்விட்டர் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இவர் இதுபற்றி கூறுகையில் ‘‘சீசன் ஒன்று முடிவு; அடுத்தது?’’ எனக் கூறியுள்ளார்.

ட்விட்டரில் ஐஓஎஸ் தயாரிப்புகளில் பணிபுரியும் ஜாரெட் மான்ப்ரெடி, ‘‘இது ஒரு நீண்ட நீதிமன்றப் போரின் தொடக்கமாக இல்லாவிட்டால், கொள்முதல் விலையைக் குறைத்து மற்றொரு காலவரையற்ற தொகைக்கு பேசலாம். ஆனால் அதுவரை சர்க்கஸ் தொடரும் நேரம். ஆட்குறைப்பு என்பதும் பெரிய ஆபத்தாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

9 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

12 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்