ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக தினசரி பாஸ்டேக் வசூல் ரூ.143 கோடி - ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு பாஸ்டேக் மூலம் கட்டண வருமானம் தினசரி ரூ.143 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்த அதிகபட்ச தொகை எட்டப்பட்டுள்ளது.

இதேபோல ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் 12.50 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுங்க கட்டண வசூல் அதிகரிப்பு மற்றும் ரயிலில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு ஆகியன மீண்டும் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பி வருவதன் அறிகுறிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த மே மாதத்தில் தினசரி ரூ.141 கோடி பாஸ்டேக் மூலம் வசூலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1.40 லட்சம் கோடி ஜிஎஸ்டி இலக்கு

இந்தியா முழுமைக்கும் ஒரே வரி விதிப்புமுறையைக் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு 2017 ஜூலை 1 அன்று ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று ‘ஜிஎஸ்டி தினம்’ கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குள்ளாகவே ஜிஎஸ்டி அதன் வீரியத்தைக் காட்டியுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரித்து இருக்கிறது. தொடர்ச்சியாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துவருகிறது. இனி நமக்கு ரூ.1.40 லட்சம் கோடிதான் அடிப்படை இலக்காக இருக்கும். அதற்கு கீழ் இனி நாம் செல்லப் போவதில்லை’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

14 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

16 hours ago

வணிகம்

17 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்