மும்பை: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுக்கு எதிராக வர்த்தகத்தை தடை செய்துள்ளன. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.
பணவீக்க விகிதத்தினை கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
» குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1977: போட்டியின்றி குடியரசுத் தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி!
» தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 79 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்கவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் பொருட்டு தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
தங்கம் இறக்குமதி வரி 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வானது ஜூன் 30ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கவரியுடன் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு செஸ் வரியான 2.5 சதவீதமும் இணைந்து கொண்டால், தங்கத்தின் சுங்க வரியானது 15 சதவீதமாக இருக்கும். கடந்த பட்ஜெட்டில் தங்கம் விலை 7.5 சதவீதம் குறைத்த நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலும் அதிகரித்துள்ளது. தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் போது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அழுத்தம் அதிகரிக்கிறது. அதனை சரி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 107 ரூபாய் உயர்ந்து ரூ.4,785-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.856 உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41,472-க்கு விற்பனையாகிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago