பெங்களூருவில் போஷ்க் நிறுவன வளாகத்தை திறந்தார் பிரதமர் மோடி

By இரா.வினோத்

பெங்களூரு: ஜெர்மனியை சேர்ந்த போஷ்க் நிறுவனம் இந்தியாவில் 100 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஆடுகோடியில் 76 ஏக்கர் பரப்பளவில் ரூ.800 கோடி மதிப்பில் அதிநவீன ‘ஸ்மார்ட்’ வளாகத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் புதிய வளாகத்தை திறந்து வைத்தார்.

அப்போது மோடி பேசியதாவது: இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், ஜெர்மனியை சேர்ந்த போஷ்க் நிறுவனம் இந்தியாவில் வெற்றிகரமாக 100-வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இது ஜெர்மன் மற்றும் இந்திய கூட்டு சக்திக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த நூற்றாண்டை கொண்டாடும் வேளையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு போஷ்க் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே தொலைநோக்கு பார்வையுடன் தீர்மானிக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் வளாகம் இந்தியாவுக்கு உலகிற்கும் புதிய கண்டுபிடிப்புகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் அதிவேக இணைய சேவையை வழங்க முயற்சித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்