கிரெடிட், டெபிட் கார்டு டோக்கனைசேஷன் காலத்தின் தேவை: செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதிமுறைகளை அமல்படுத்துவதை செப்டம்பர் 30-ம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வர்த்தக நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது, கார்டு-ஆன்-ஃபைல் டோக்கன்களை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைன் நிறுவனங்கள் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் அதையும் அழித்துவிட வேண்டும். அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்கக்கூடாது.

ஆன்-லைன் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்கள் குறித்த எந்தவிவரங்களும் சேமிக்கப்படாது என்பதால், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போதும் கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி, பெயர் ஆகியவற்றை பதிவிட்டு பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பரிவர்த்தனை செய்ய உதவும் வகையில், மறைக்கப்பட்ட டோக்கன்களாகச் சேமிக்கப்படும். வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணம் செலுத்த இந்த டோக்கன்கள் அனுமதிக்கும். ஆன்-லைன் மின்னணு வர்த்தகத் தளங்கள் வாடிக்கையாளர் தொடர்பான எந்தவிதமான விவரங்களையும் சேமித்து வைக்கக் கூடாது.

இதனை செயல்படுத்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இது ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 1 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில் டோக்கனைசேஷன் விதிகளை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கையை ஏற்று மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த மாற்றம்?

சில்லறை விற்பனையாளர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவலைத் தக்கவைத்துக்கொள்வதால் அவர்களின் பாதுகாப்பு நடைமுறைகள் பலவீனமாக இருந்தால் பணம் திருடப்படும் ஆபத்து உள்ளது. முந்தைய பல ஹேக்கிங் சம்பவங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் வணிகர் இணையதளங்களின் மூலம் இது தெரிய வந்தது. கார்டு டோக்கனைசேஷன் மூலம், விஷயங்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

எந்தவொரு பொருட்களை வாங்க கார்டை பஞ்ச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், கார்டு டோக்கனைசேஷன் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் மற்றும் செக் அவுட்களை விரைவுபடுத்தும். கார்டு டோக்கனைசேஷன் மூலம் பயனர்கள் தங்கள் கார்டின் டிஜிட்டல் நகலை தங்கள் ஸ்மார்ட்போனில் சேமிக்க முடியும். எனவே உடன் அட்டையை எடுத்துச் செல்வது தேவையற்றது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு டோக்கனைசேஷன் என்பது காலத்தின் தேவை என்று பலர் நம்புகிறார்கள், ஏனெனில் இது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

மேலும்